ஆய்விற்கு வந்து ஆசிரியராக மாறிய கலெக்டர் - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, March 2, 2021

ஆய்விற்கு வந்து ஆசிரியராக மாறிய கலெக்டர்

 ஆய்விற்கு வந்து ஆசிரியராக மாறிய கலெக்டர்


ஓட்டுச்சாவடி ஆய்விற்கு வந்த கலெக்டர் கண்ணன் ஆசிரியராக மாறி மாணவர்களுக்கு போதிய அறிவுரையும் வழங்கினார். 


அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுச்சாவடியை விருதுநகர் மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் கண்ணன் ஆய்வு செய்தார். உடன் இருந்த அதிகாரிகளிடம் மைய ஏற்பாடுகளை கேட்டறிந்தார். அப்போது பள்ளியில் பிளஸ் 2 மாணவர்கள் வகுப்பறையில் படித்து கொண்டிருந்தனர்


. அங்கு சென்ற கலெக்டர் மாணவர்களிடம் எப்படி படிக்கிறீர்கள் என கேட்டதோடு எந்த பாட பிரிவு என கேட்டார். அப்போது வணிகவியல் பிரிவு என கூறியவர்களிடம், நல்ல பாட பிரிவு என்றும் ,அதற்கு வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆடிட்டருக்கு படிக்க வசதியான பிரிவு. இஷ்டப்பட்டு படித்தால் வாழ்வில் முன்னேறலாம் என ஆசிரியராக மாறி அறிவுரை வழங்கினார்.மாணவர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

No comments:

Post a Comment