அரசு ஊழியர் ஓய்வு வயதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: ஊழல் ஒழிப்பு சங்கம் வலியுறுத்தல் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, March 3, 2021

அரசு ஊழியர் ஓய்வு வயதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: ஊழல் ஒழிப்பு சங்கம் வலியுறுத்தல்

 அரசு ஊழியர் ஓய்வு வயதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: ஊழல் ஒழிப்பு சங்கம் வலியுறுத்தல்


மக்கள் உரிமை மற்றும் ஊழல் ஒழிப்பு சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வக்கீல் பெர்ரி, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது


: தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளில் அரசு வேலைக்காக அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் 80 லட்சத்தை கடந்துவிட்டது. அவர்கள், குடும்ப வறுமை காரணமாக கிடைக்கும் வேலைக்கு செல்கின்றனர்.


 குறிப்பாக இளைஞர்கள், இளம்பெண்கள் ஜவுளிக்கடை, பெட்ரோல் பங்க், ஜெராக்ஸ் கடை, ஓட்டல் சப்ளையர், தள்ளு வண்டியில் காய்கறி வியாபாரம் செய்தல் என 10 மணி நேரத்துக்கு மேலாக வேலை செய்தின்றனர்.


மேலும், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், செவிலியர்கள், சமூக வன பாதுகாவலர்கள் என பலர் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்க்கிறார்கள்.


 இந்நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 ஆக நீட்டிப்பு செய்திருப்பது இளைய தலைமுறையினரின் எதிர்காலம் பாதிக்கப்படும். எனவே, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு மூப்பின் அடிப்படையில் பட்டதாரிகளுக்கு வேலை வழங்க வேண்டும்


. ஓய்வுபெற்ற அரசு பணியாளர்களை மீண்டும் தொகுப்பூதியத்தில் பணியமர்த்த கூடாது. உயர் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியமர்த்த கூடாது. அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது நீட்டிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment