வேலம்மாள் பள்ளி மாணவி உலக சாதனை - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, March 14, 2021

வேலம்மாள் பள்ளி மாணவி உலக சாதனை

 வேலம்மாள் பள்ளி மாணவி உலக சாதனை


சென்னை, காரம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எல்கேஜி வகுப்பு மாணவி வி.லட்சிதா ஸ்ரீமிகக்குறைந்த கால அளவில் அதிகபட்சமாக 70 காகித முயல்களை உருவாக்கினார். இதன் மூலம் இளைய வயதில் இந்த சாதனையைச் செய்த இளம் சாதனையாளராக ராபா உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றார். 


இந்த உலக சாதனையை ராபாவின் மீடியாவான  ராபா புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனையொட்டி நடைபெற்ற பாராட்டு விழாவில், அவருக்கு வெள்ளிப் பதக்கம், கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. அவரது சாதனையைப் பள்ளி நிர்வாகம் பாராட்டியது.

No comments:

Post a Comment