மதுரை காமராஜ் பல்கலைக்கு உயர் அந்தஸ்து - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, March 16, 2021

மதுரை காமராஜ் பல்கலைக்கு உயர் அந்தஸ்து

 மதுரை காமராஜ் பல்கலைக்கு உயர் அந்தஸ்து


தேசிய தரமதிப்பீட்டு கவுன்சில் (நாக்) நடத்திய ஆய்வில் மதுரை காமராஜ் பல்கலைக்கு உயர் அந்தஸ்து (ஏ++) வழங்கப் பட்டுள்ளது.


இந்த ஆய்வில் பாடத் திட்டம், மாணவர்கள் சேர்க்கை, ஆசிரியர்கள் தகுதி, நிர்வாகம், ஆராய்ச்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது. 

இதன் அடிப்படையில் மொத்தம் 3.54 புள்ளிகள் (சி.ஜி.பி.ஏ.,) வழங்கப்பட்டு உயர் தகுதிக்கு (ஏ++) தேர்வு பெற்றது.


துணைவேந்தர் கிருஷ்ணன் கூறுகையில் "அனைவரின் ஒத்துழைப்பு, உழைப்பால் இந்த உயர் அந்தஸ்து கிடைத்தது. மொத்தம் 7 பிரிவுகளில் நடத்திய ஆய்வில் பல்கலை பாடத்திட்டம் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்கு முழு மதிப்பெண் கிடைத்தது" என்றார்.

No comments:

Post a Comment