TNPSC தேர்வு முடிவு வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, March 16, 2021

TNPSC தேர்வு முடிவு வெளியீடு

 TNPSC தேர்வு முடிவு வெளியீடு


டி.என்.பி.எஸ்.சி., நடத்திய இரண்டு தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டன. 


தமிழக அரசு பணியாளர்தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக பொது பணிகளுக்கு, உதவி இயக்குனர் மற்றும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பதவிகளில், 102 இடங்களை நிரப்ப, 2019 நவம்பரில் தேர்வு நடந்தது


.தமிழக தொழில் துறை பணிகளுக்கு, உதவி இயக்குனர் மற்றும் உதவி கண்காணிப்பாளர் பதவிகளில், 12 காலியிடங்களுக்கு, இந்த ஆண்டு ஜனவரியில் தேர்வு நடந்தது.


இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர் விபரங்கள், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பட்டியலில் உள்ளவர்கள், வரும், 22ம் தேதி முதல், 30ம் தேதிக்குள், தங்கள் சான்றிதழ்களை, 'இ- - சேவை' மையங்கள் வழியே பதிவேற்றம் செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment