சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு 'ஆல்பாஸ்' அறிவிப்பு பொருந்துமா? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, March 1, 2021

சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு 'ஆல்பாஸ்' அறிவிப்பு பொருந்துமா?

 சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு  'ஆல்பாஸ்' அறிவிப்பு பொருந்துமா?


ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரையிலான, 'ஆல்பாஸ்' அறிவிப்பை, சிறப்பு பள்ளி மாணவர்களுக்கும், தனித் தேர்வர்களுக்கும் அமல்படுத்த வேண்டும்' என்ற, கோரிக்கை எழுந்து உள்ளது.


கொரோனா பிரச்னையால், பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் இயங்காததால், மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. 


அதனால், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரையிலான மாணவர்களுக்கு, தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, 'ஆல் பாஸ்' செய்யப்படுவதாக, முதல்வர் இ.பி.எஸ்., சட்டசபையில் அறிவித்தார். இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு, கவர்னர் ஒப்புதலுடன் அரசிதழில் வெளியிடப்பட்டது.


இந்நிலையில், 'ஆல் பாஸ்' அறிவிப்பை, தனி தேர்வர்களுக்கும், மாற்றுத்திறன் பள்ளி மாணவர்களுக்கும் அமல்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.


 இதுகுறித்து, கோவை வித்யாவிகாசினி பள்ளி தலைமையாசிரியர் ஜோதி கூறியதாவது: கடந்தாண்டு தொற்று காலத்திலும், மாற்றுத்திறன் உடைய தனித்தேர்வர்கள், தேர்வெழுத வலியுறுத்தப்பட்டது. இந்த ஆண்டும் அரசு, 'ஆல் பாஸ்' என அறிவித்தாலும், சிறப்பு குழந்தைகளுக்கு அமல்படுத்துவது குறித்து குறிப்பிடப்படவில்லை.


ஆண்டு முழுதும் படித்தாலும், இத்தகைய மாணவர்கள், அடுத்த பொதுத்தேர்வு வரை, பாடங்களை நினைவில் வைத்து எழுதுவது, சிரமமாக இருக்கும். எனவே, அவர்களுக்கும் தேர்வு இன்றி, தேர்ச்சி வழங்க வேண்டும்.


இவ்வாறு, அவர் கூறினார்.அதேபோல, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனி தேர்வர்களுக்கும், 'ஆல் பாஸ்' வழங்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment