அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்க உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, March 1, 2021

அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்க உத்தரவு

 அனைத்து பாடங்களையும்  நடத்தி முடிக்க உத்தரவு


'குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தின்படி, அனைத்து பாடங்களையும் விரைந்து நடத்த வேண்டும்' என, ஆசிரியர்களை, அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.


கொரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு தேர்வு மற்றும் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன


.பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. மே, 3ல், இந்த தேர்வு துவங்க உள்ளது. தேர்வு ரத்தானதால், ஆசிரியர்கள் பாடங்களை நடத்துவதில் சுணக்கம் காட்டுவதாக, பெற்றோர் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இந்நிலையில், ஒவ்வொரு கல்வி மாவட்ட வாரியாக, பள்ளி கல்வி அலுவலர்கள் நேரடியாக பள்ளிகளுக்கு சென்று, பாடங்கள் நடத்தப்படுவதை ஆய்வு செய்கின்றனர்.'அனைத்து பள்ளிகளிலும், குறைக்கப்பட்ட பாட திட்டத்தின்படி, அனைத்து பாடங்களையும் கண்டிப்பாக நடத்தி முடிக்க வேண்டும். 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, குறைக்கப்பட்ட பாடத்திட்டம் மட்டுமின்றி, மற்ற பாடங்களையும் நடத்த வேண்டும்' என, அறிவுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment