பள்ளி, கல்லூரி சொத்துகள் பாதுகாக்கப்படும் - Minnal Kalvi Seithi

Breaking

Monday, March 15, 2021

பள்ளி, கல்லூரி சொத்துகள் பாதுகாக்கப்படும்

 பள்ளி, கல்லூரி சொத்துகள் பாதுகாக்கப்படும்


பெங்களூரு :சட்டமேலவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது கட்சி பேதமில்லாமல் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு கல்வியமைச்சர் சுரேஷ்குமார் பதிலளிக்கையில், மாநிலத்தில் 20,751  ஆரம்ப பள்ளிகள், 22,499 நடுநிலை பள்ளிகள், 4,727 உயர்நிலை பள்ளிகள், 1,1234 முதல்நிலை கல்லூரிகள் இயங்கி வருகிறது.


 அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு  சொந்தமான சொத்துகளை பாதுகாக்கும் விஷயத்தில் அரசு உறுதியாக உள்ளது. 


மாநிலத்தில்  அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு சொந்தமான சொத்து விவரங்களை சேகரித்து அறிக்ைக கொடுக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினர் தற்ேபாது 26 ஆயிரம் காலியிடங்களை அடையாளம் கண்டுள்ளனர். தனிநபர்கள் பள்ளி, கல்லூரிகளின் மேம்பாட்டிற்கு நிலம் வழங்கியுள்ளனர். அது  குறித்தும் விவரம் சேகரிக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment