3 ஆண்டுக்கு மேல் இடமாற்றம்: கோரிக்கையை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு - Minnal Kalvi Seithi

Breaking

Monday, March 15, 2021

3 ஆண்டுக்கு மேல் இடமாற்றம்: கோரிக்கையை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

 3 ஆண்டுக்கு மேல் இடமாற்றம்: கோரிக்கையை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு


ஒரே இடத்தில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவர்களை இடமாற்றம் செய்யக் கோரியதை, தேர்தல் ஆணையம் பரிசீலிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல்லா என்பவர் தாக்கல் செய்த மனு:தேர்தல் நடத்தை விதிகளின்படி, ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவர்களை, இடமாற்றம் செய்ய வேண்டும். திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில், வேளாண் துறையில் பணியாற்றுபவர்களை இடமாற்றம் செய்யவில்லை.இதுகுறித்து, தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மனுவை பரிசீலித்து, உத்தரவு பிறப்பிக்க, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. 


மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. மனுவில் குறிப்பிட்டுள்ள அதிகாரிகளை, தேர்தல் பணியில் ஈடுபடுத்தவில்லை என, தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனுவை பரிசீலித்து முடிவெடுக்க, தேர்தல் ஆணையத்துக்கு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை முடித்து வைத்தது.

No comments:

Post a Comment