ஓட்டு போட சம்பளத்துடன் விடுமுறை - Minnal Kalvi Seithi

Breaking

Monday, March 15, 2021

ஓட்டு போட சம்பளத்துடன் விடுமுறை

 ஓட்டு போட சம்பளத்துடன் விடுமுறை


தொழிலாளர்கள் ஓட்டு போட, சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என, தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.


தமிழக சட்டசபை பொது தேர்தல் மற்றும் கன்னியாகுமரி லோக்சபா தேர்தல், ஏப்., 6ல் நடக்கிறது. அன்றைய தினம் கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும், பணிபுரியும் தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் என, அனைவரும் ஓட்டளிக்க, சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும்.


கட்டுமான தொழில் உள்ளிட்ட அனைத்து அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும், சம்பளத்துடன் விடுப்பு வழங்க வேண்டும்.'இதை வேலை வாய்ப்பு அளிப்போர் நடைமுறைப்படுத்த வேண்டும்' என, தொழிலாளர் நலத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment