ஐ.சி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, April 20, 2021

ஐ.சி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து

 ஐ.சி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து


புதுடில்லி:கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஐ.சி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாதுகாப்புபல மாநிலங்களில், 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை ரத்து செய்தும், ஒத்தி வைத்தும், மாநில கல்வி வாரியங்கள் உத்தரவுகள் பிறப்பித்துள்ளன.

இதே போல், சி.ஐ.சி.எஸ்.இ., எனப்படும், இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சிலால் நடத்தப்படும், ஐ.சி.எஸ்.இ., 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக, கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், ஐ.சி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக, அறிவிக்கப்பட்டது.


இதுகுறித்து, சி.ஐ.சி.எஸ்.இ., கவுன்சிலின் செயலரும், தலைமை நிர்வாகியுமான அராத்துான் நேற்று கூறியதாவது:கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள சூழல், மிகவும் மோசமாக உள்ளது. அதை கருத்தில் வைத்து, ஐ.சி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு, எங்களுக்கு மிகவும் முக்கியம்


முதுநிலை படிப்பு முடித்தோர், கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, 'யு.ஜி.சி., - நெட்' எனப்படும், தேசிய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு, வரும் மே 2ம் தேதி முதல், 17ம் தேதி வரை நடத்த, திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, அந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், 'டுவிட்டர்' வாயிலாக நேற்று வெளியிட்டார். இந்த தேர்வு நடக்கும் புதிய தேதிகள், பின்னர் அறிவிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment