கொரோனாவுக்கு பிறகு பிஎட் கல்லூரிகளில் 850 பேர் சேர்ப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, April 20, 2021

கொரோனாவுக்கு பிறகு பிஎட் கல்லூரிகளில் 850 பேர் சேர்ப்பு

 கொரோனாவுக்கு பிறகு பிஎட் கல்லூரிகளில் 850 பேர் சேர்ப்பு


தமிழகத்தில் இயங்கி வரும் பிஎட் கல்லூரிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாமல் போனதால் பிஎட் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை  நடத்தக்கூடாது என்று தேசிய ஆசிரியர் கல்வி கழகம் (என்சிடிஇ) தெரிவித்து இருந்தது. அதனால் பிஎட் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடக்காமல்  இருந்தது. தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் 18 ஆசிரியர்களை 7 அரசு பிஎட் கல்லூரிகளுக்கு மாற்றி கல்லூரிக்  கல்வி இயக்ககம் உத்தரவிட்டது. 


ஆசிரியர் தேர்வு வாரியம் தாமதமாக நியமனங்களை செய்ததை அடுத்து 31 பேர் மாவட்ட கல்வியியல்  நிறுவனங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகளை அடுத்து, மார்ச் மாதத்தில் பிஎட் படிப்பில் மாணவர்களை சேர்க்கலாம் என்று என்சிடிஇ  இசைவளித்துள்ளது.


தமிழகத்தில் உள்ள 7 அரசு பிஎட் கல்லூரிகள் மற்றும் 14 நிதியுதவி பெறும் பிஎட் கல்லூரிகளில்  2000 இடங்கள் உள்ள நிலையில் 3000 மாணவ,  மாணவியர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு ஆன்லைன் மூலம் கவுன்சலிங் நடத்தி டிசம்பர் மாதம்  சேர்க்கை உத்தரவுகள் வழங்கப்பட்டன.


 இதையடுத்து முதலாம் ஆண்டு மாணவர்கள் செப்டம்பர் மாதம் தேர்வு எழுதுவார்கள். அவர்களுக்கு அடுத்த  கல்வி ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கும். அரசு பிஎட் கல்லூரில் இந்த விதிகளின்படி ஆசிரியர்கள் இல்லை. அதற்கு பதிலாக பாதியளவு  ஆசிரியர்கள் தற்போது பணியாற்றுவதாக ஒரு குற்றச்சாட்டும் உள்ளது. 


அதிக அளவில் காலியிடங்கள் இருப்பதால்  கடந்த 2020-21ம் கல்வி  ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை என்சிடிஇ நிறுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த இடங்களில் 850 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்

No comments:

Post a Comment