புத்தக நாள் விழா: ஏப். 30 வரை 10 - 50% தள்ளுபடி விற்பனை -செஞ்சுரி புக் ஹவுஸ் அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, April 20, 2021

புத்தக நாள் விழா: ஏப். 30 வரை 10 - 50% தள்ளுபடி விற்பனை -செஞ்சுரி புக் ஹவுஸ் அறிவிப்பு

 புத்தக நாள் விழா: ஏப். 30 வரை 10 - 50% தள்ளுபடி விற்பனை -செஞ்சுரி புக் ஹவுஸ் அறிவிப்பு

உலகப் புத்தக நாளையொட்டி  ஏப். 23 முதல் 30 ஆம் தேதி வரை அனைத்து என்சிபிஎச்  கிளை விற்பனை நிலையங்களிலும் சிறப்பு விற்பனையாக வாசகர்களுக்கு சலுகை விலையில் புத்தகங்கள் விற்கப்படவுள்ளதாக நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (என்சிபிஎச்) அறிவித்துள்ளது.


இந்தச் சிறப்பு விற்பனையில் அனைத்து நியூ செஞ்சுரி புத்தக விற்பனை நிலையங்களிலும்  ஏப். 30 வரை, 10 முதல் 50 சதவிகிதத் தள்ளுபடி விலையில் என்சிபிஎச் புத்தகங்களை வாசகர்கள்  பெற்றுக்கொள்ளலாம் என்று பொது மேலாளர் தி.ரத்தினசபாபதி தெரிவித்துள்ளார்.


இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம், பெண்ணியம், தலித்தியம், சூழலியல், அறிவியல், சமூகவியல், பண்பாட்டியல், சங்க இலக்கியம், இலக்கணம், இலக்கியம், சிறுகதை, நாவல், பாரதி, பாரதிதாசன், அப்துல் கலாம் நூல்கள், மொழிபெயர்ப்பு உள்ளிட்ட வகைமைகளில் ஆயிரக்கணக்கான  தலைப்புகளில் கிடைக்கும் என்சிபிஎச் வெளியீடுகளைக் குறைந்த விலையில் பெறலாம் என்று ரத்தினசபாபதி குறிப்பிட்டுள்ளார்.

1 comment: