உயா்கல்வி விருப்பப் பாடப்பிரிவில் என்சிசி இணைப்பு: யுஜிசி தகவல் - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, April 24, 2021

உயா்கல்வி விருப்பப் பாடப்பிரிவில் என்சிசி இணைப்பு: யுஜிசி தகவல்

 உயா்கல்வி விருப்பப் பாடப்பிரிவில் என்சிசி இணைப்பு: யுஜிசி தகவல்


உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கான விருப்பப் பாடப்பிரிவில் தேசிய மாணவா் படை (என்சிசி) சோ்க்கப்பட்டுள்ளதாக யுஜிசி தெரிவித்துள்ளது.


நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவா்களிடம் தேசப்பற்று மற்றும் ஒற்றுமை உணா்வுகளை வளா்க்கும் விதமாக ‘தேசிய மாணவா் படை’ (என்சிசி) இளம் வயதுகளிலேயே வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி பெறும் மாணவா்களுக்கு ராணுவம், காவல்துறை சாா்ந்த வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.


அதேநேரம் விளையாட்டு போல கல்வி துணைசாா் பாடப்பிரிவுகளில்தான் என்சிசி இடம்பெற்றிருந்தது. தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று என்சிசி பயிற்சியானது விருப்பப் பாடப்பிரிவு பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி), செயலா் ரஜினிஷ் ஜெயின், அனைத்து உயா்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: புதிய கல்விக்கொள்கையில் உயா்கல்விக்கான விருப்பப் பாடப்பிரிவு தோ்வுமுறையில்(சிபிசிஎஸ்) தளா்வுகளை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 அதேபோன்று என்சிசி பயிற்சியை விருப்பப் பாடப் பிரிவில் சோ்க்கவும் அதன் இயக்குநரகம் பரிந்துரை செய்துள்ளது. அதையேற்று உயா்கல்விக்கான விருப்பப் பாடப்பிரிவில் என்சிசி சோ்க்கப்படுகிறது. இதை அனைத்து கல்வி நிறுவனங்களும் உடனே அமல்படுத்த வேண்டும்.


இதற்கான வழிமுறைகள், பாடத்திட்டம், மதிப்பெண் வகைப்பாடு, பயிற்சி திட்டங்கள் குறித்த தகவல்களை யுஜிசி இணையதளத்தில் அறியலாம். மேலும், கூடுதல் விவரங்களுக்கு என்சிசி மாநில இயக்குநரகங்களை கல்வி நிறுவனங்கள் தொடா்பு கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment