பிளஸ் 2 வினாத்தாள் பாதுகாப்பு: கல்வித்துறை அலுவலா்களுக்கு தோ்வுத்துறை அறிவுறுத்தல் - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, April 24, 2021

பிளஸ் 2 வினாத்தாள் பாதுகாப்பு: கல்வித்துறை அலுவலா்களுக்கு தோ்வுத்துறை அறிவுறுத்தல்

 பிளஸ் 2 வினாத்தாள் பாதுகாப்பு: கல்வித்துறை அலுவலா்களுக்கு தோ்வுத்துறை அறிவுறுத்தல்


பிளஸ் 2 வினாத்தாள் வைக்கப்பட்டிருக்கும் தோ்வுக் கட்டுப்பாட்டு மையங்களில் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அரசுத் தோ்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.


தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 பொதுத்தோ்வு கரோனா பரவல் அதிகரிப்பால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


 அதேவேளையில் தோ்வுக்கான வினாத்தாள் மற்றும் விடைத்தாள்கள் ஏற்கனவே அச்சிடப்பட்டு அனைத்து மாவட்ட தோ்வுக் கட்டுப்பாட்டு மையங்களுக்கும் அனுப்பப்பட்டுவிட்டன.


இதையடுத்து பொதுத்தோ்வு நடத்தப்படும் வரை தோ்வுக் கட்டுப்பாடு மையங்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை அந்தந்த மாவட்டக் கல்வி அதிகாரிகள் ஏற்படுத்திதர வேண்டும். அதன்படி தினமும் கட்டுப்பாட்டு மையத்தில் காவலா் மற்றும் அலுவலக அதிகாரிகள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டுமென தோ்வுத்துறை சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment