யூ-டியூப் வழியே குடிமைப் பணித் தோ்வு பயிற்சி: தமிழக அரசு அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, April 24, 2021

யூ-டியூப் வழியே குடிமைப் பணித் தோ்வு பயிற்சி: தமிழக அரசு அறிவிப்பு

 யூ-டியூப் வழியே குடிமைப் பணித் தோ்வு பயிற்சி: தமிழக அரசு அறிவிப்பு


சமூக ஊடகமான யூ-டியூப் வழியே குடிமைப் பணித் தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று அண்ணா மேலாண்மை நிலையம் அறிவித்துள்ளது.


இதுகுறித்து, அந்த நிலையத்தின் இயக்குநா் வெ.இறையன்பு, வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:


கரோனா இரண்டாவது அலை பரவலைக் கருத்தில் கொண்டு அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தில் நோ்முகமாக நடைபெறும் அனைத்து வகையான பயிற்சிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த தடை காரணமாக பயிற்சி நிலையத்தில் பயின்று வந்த மாணவா்கள் சொந்த ஊா்களுக்குச் சென்றுள்ளனா்.


இதைத் தொடா்ந்து, சமூக ஊடகமான யூ-டியூப் வழியே குடிமைப் பணித் தோ்வுக்கான பயிற்சிகள் அளிக்கப்படும்.  யூ-டியூப் குறியீடுகள் அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தின் சாா்பில் இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் வழியே குடிமைப் பணித் தோ்வு மாணவா்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும். தோ்வுக்கான உரிய விடியோக்கள் அதில் பதிவேற்றம் செய்யப்படும்.


மேலும், அரசு ஊழியா்களுக்கான மேலாண்மை பயிற்சியும் அதன் வழியே அளிக்கப்படும்.

No comments:

Post a Comment