வேளாண் இடுபொருள் துறையில் டிப்ளமோ தொலைதூரக் கல்வி - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, April 24, 2021

வேளாண் இடுபொருள் துறையில் டிப்ளமோ தொலைதூரக் கல்வி

 வேளாண் இடுபொருள் துறையில் டிப்ளமோ தொலைதூரக் கல்வி


வேளாண் பல்கலைக்கழகத்தில், தொலைதூர கல்வி வாயிலாக, வேளாண் இடு பொருள் துறையில் ஓராண்டு 'டிப்ளமோ' பயில அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக்கல்வி இயக்ககத்தின் சார்பில், ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.இந்த ஓராண்டுப் பட்டயப்படிப்பில், வேளாண் இடு பொருட்கள் குறித்தும், அடிப்படை வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்தும் கற்றுத்தரப்படும். இப்படிப்பில் சேர, 10ம் வகுப்பு தேர்ச்சியடைந்தவர்கள், அல்லது தோல்வியுற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு கிடையாது.நேரடி பயிற்சி வகுப்புகள், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் நடக்கும். 


இந்த படிப்புக்கான கட்டணம், 25 ஆயிரம் ரூபாய். இந்த பட்டய படிப்பு, வேளாண் இடு பொருட்கள் விற்பனையகம் நடத்தவும், அது தொடர்பான சுயதொழில்கள் துவங்கவும் உதவியாக இருக்கும். பொள்ளாச்சியிலுள்ள விவசாயிகள், விவசாய ஆர்வமுள்ளவர்கள் இந்த படிப்பில் சேர்ந்து பயன்பெறலாம்.கூடுதல் விவரங்களுக்கு, இயக்குனர், திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோவை, என்ற முகவரியிலோ; அல்லது, 0422 -6611229, 94421 11048, 94890 51046 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம், என, அறிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment