தபால் ஓட்டு :ஆசிரியர்கள் தவிப்பு
திருப்பூர் மாவட்டத்தில், 8 ஆயிரத்து, 600 ஆசிரியர், கல்வித்துறை பணியாளர்கள் ஏப்., 6ம் தேதி நடந்த சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களில் 75 சதவீத தபால் வாக்குகளே செலுத்தப்பட்டுள்ளது;
பிற மாவட்டங்களில் ஓட்டுக்கள் உள்ளவர்கள் பெரும்பாலானோருக்கு தபால் ஓட்டுக்கான படிவமே கிடைக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி கூறுகையில், ''தேர்தல் ஆணையத்தின் நூறு சதவீத வாக்களிப்பு முயற்சியை அரசு ஊழியர்களே பின்பற்ற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. தபால் ஓட்டுக்களை வழங்காமல் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இழுத்தடிப்பதற்கு காரணம் தெரியவில்லை.
உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, 'திருப்பூர் தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களுக்கான தபால் ஓட்டுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பிற மாவட்ட வாக்காளர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் இருந்த தபால் ஓட்டுகள் அனுப்பி வைக்கப்படும்.தபால் ஓட்டு கையில் கிடைத்தவர்களும் மெதுவாக அனுப்பலாம் என, அலட்சியமாக உள்ளனர்.
தபால் வாக்கு செலுத்த வாக்கு எண்ணிக்கை நாளான, மே 2 காலை, 8:00 மணி வரை அவகாசம் இருந்தாலும், தபால்துறை தாமதத்தை தவிர்க்க ஏப்., 25க்குள் செலுத்த வேண்டும்' என்றனர்.
SOURCE

No comments:
Post a Comment