தமிழகத்தின் இந்த கல்லூரிக்கு A+ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, April 24, 2021

தமிழகத்தின் இந்த கல்லூரிக்கு A+ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது

 தமிழகத்தின் இந்த கல்லூரிக்கு A+ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது


சிவகாசி PSR பொறியியல் கல்லூரிக்கு, மத்திய அரசின் தேசிய மதிப்பீடு அங்கீகார ஆணையம் (நாக்) ஏ ப்ளஸ் தரச் சான்று வழங்கி உள்ளதாக,'' கல்லூரி தாளாளர் சோலைசாமி கூறினார்.


மேலும் அவர் கூறியதாவது: மத்திய அரசின் தேசிய மதிப்பீடு அங்கீகார ஆணையம் தேசிய அளவில் ஒவ்வொரு கல்லூரியின் உள் கட்டமைப்பு, கற்றல் , கற்பித்தல் , பேராசிரியர்களின் தரம், ஆராய்ச்சி கூடம், வேலைவாய்ப்பு, நூலகம், ஆய்வுகூடம், போன்றவற்றை ஆய்வு செய்கின்றனர். ஆய்வின் அடிப்படையில் அந்தந்த கல்லூரிக்கு தர சான்றிதழ் வழங்குகின்றனர். 


இதன் மூலம் புதிதாக சேரும் மாணவர்கள் கல்லூரியின் தரத்தை எளிதில் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும். அகில இந்திய அளவில் 1804 கல்லூரிகள் நாக் அங்கீகாரம் பெற்றுள்ளது. 99 கல்லூரிகள் மட்டுமே ஏ ப்ளஸ் தர சான்றிதழ் பெற்றுள்ளது. இந்திய அளவில் ஏ ப்ளஸ் தர சான்றிதழ் பெற்ற 99 கல்லூரிகளில் பி.எஸ்.ஆர்., கல்லூரியும் ஒன்று,என்றார். கல்லூரி இயக்குநர்கள் விக்னேஷ்வரி, அருண்குமார், முதல்வர் விஷ்ணுராம், டீன் மாரிச்சாமி உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment