தள்ளுபடியாகும் தபால் ஓட்டு எது? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, April 28, 2021

தள்ளுபடியாகும் தபால் ஓட்டு எது?

 தள்ளுபடியாகும் தபால் ஓட்டு எது?


தள்ளுபடி செய்யவேண்டிய தபால் ஓட்டுகள் குறித்து தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.தபால் ஓட்டு பதிவில், செல்லாத ஓட்டு கண்டறிய, தேர்தல் கமிஷன் வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. 


தபால் ஓட்டு உறைக்குள், உறுதிமொழி படிவம் இல்லை என்றாலோ, படிவத்தில் வாக்காளர் மற்றும் சான்றொப்பம் செய்த அதிகாரியின் கையெழுத்து இல்லை என்றாலோ, அது செல்லாத ஓட்டாக கருதப்படும்.உறுதிமொழி படிவத்தில் உள்ள வாக்காளர் வரிசை எண்ணும், ஓட்டு சீட்டு உறை மீது எழுதியுள்ள வரிசை எண்ணும் வேறுபட்டு இருந்தால், தள்ளுபடி செய்யலாம்.


உறுதிமொழி படிவத்தை, தனியாக உறைக்குள் வைக்காமல், ஓட்டு சீட்டுடன் சேர்த்து சிறிய உறைக்குள் வைத்திருந்தாலும் தள்ளுபடி செய்யலாம்.ஓட்டு சீட்டை 'படிவம் ~ 13பி'க்குள் வைக்காமல், தனியே வைத்திருந்தாலும், ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளருக்கு ஓட்டளித்திருந்தாலும், போலி ஓட்டு சீட்டு என்றாலும் தள்ளுபடி செய்யலாம். 


சேதமாகி, முற்றிலும் கிழிந்த மற்றும் கசங்கிய நிலையிலோ உள்ள தபால் ஓட்டுகளையும் தள்ளுபடி செய்யலாம். இவற்றை தள்ளுபடி செய்ய தேர்தல் நடத்தும் அலுவலரின் முன் அனுமதி பெற வேண்டும்.

No comments:

Post a Comment