மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கும் விடுமுறை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, April 30, 2021

மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கும் விடுமுறை

 மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கும் விடுமுறை


அரசுப் பள்ளிகளை தொடர்ந்து மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் இன்று முதல்  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


 பிளஸ் 2 தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டு, மாணவர்களும் பள்ளிக்கு வராத நிலையில், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டுமா என்ற  கேள்வி எழுந்தது. இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் அரசுக்கு கடிதம் எழுதினார். அதன் பேரில் அரசும் அனுமதி  அளித்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மே 1ம் தேதி முதல் பள்ளிக்கு வர  வேண்டியதில்லை என்று அரசு அறிவித்தது.


ஆனால், தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் குறித்து ஏதும் அறிவிக்கவில்லை. இதையடுத்து,  மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி, தனியார் மற்றும் சுயநிதி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும்  மே 1ம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டியதில்லை என்று அறிவித்துள்ளார். இதையடுத்து, இன்று முதல் தனியார் பள்ளி  ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டியதில்லை.

1 comment:

  1. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம்...அரசு வழங்குமா?

    ReplyDelete