பிங்க் நிறத்தில் வாட்ஸ்அப் உஷாராக இருக்க போலீஸ் எச்சரிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, April 20, 2021

பிங்க் நிறத்தில் வாட்ஸ்அப் உஷாராக இருக்க போலீஸ் எச்சரிக்கை

 பிங்க் நிறத்தில் வாட்ஸ்அப் உஷாராக இருக்க போலீஸ் எச்சரிக்கை


பிங்க்' நிறத்தில் 'வாட்ஸ்அப்' செயலி தொடர்பாக உலா வரும் தகவலால் மொபைல் போனில் உள்ள தகவல்கள் 'ஹேக்' செய்யப்படலாம்' என, போலீசார் எச்சரித்துள்ளனர்.


கடந்த சில நாட்களாக, 'பிங்க்' நிறத்தில் 'வாட்ஸ்அப்' செயலியை பயன்படுத்தலாம் என்று ஒரு தகவல் பரவி வருகிறது. இத்தகவலுடன் 'வாட்ஸ்அப்' பிங்க் நிறத்தில் பயன்படுத்த ஒரு இணைய முகவரியும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கும் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் நிறுவனத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என, தெரியவந்துள்ளது


அந்த இணைய முகவரியை, 'கிளிக்' செய்தால், நமது ஸ்மார்ட்போனில் ஆபத்தை விளைவிக்கும் செயலி தானாக பதிவேறிவிட வாய்ப்புள்ளது. இதன்மூலம் நமது மொபைல் போனில் உள்ள விபரங்களை ஹேக்கர்கள் இயக்க முடியும் என, கூறப்படுகிறது. இதனால், எச்சரிக்கையாக இருக்க சைபர் க்ரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.


போலீசார் கூறுகையில், 'இந்த பிங்க் நிற 'வாட்ஸ்அப்' தகவல் போலியானது.பயனர்களின் விபரங்களை சேகரிக்க ஹேக்கர்கள் திட்டமிட்டிருக்கலாம். போலியான தகவல்களை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு அனுப்பக் கூடாது. பயனர்கள் உஷாராக இருக்க வேண்டும்' என்றனர்.

No comments:

Post a Comment