கொரோனா விதிமுறை மீறல்: நீட் பயிற்சி மையத்துக்கு ‘சீல்’ - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, April 28, 2021

கொரோனா விதிமுறை மீறல்: நீட் பயிற்சி மையத்துக்கு ‘சீல்’

 கொரோனா விதிமுறை மீறல்:  நீட் பயிற்சி மையத்துக்கு ‘சீல்’


சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள தனியார் அகாடமியில் மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி நடத்தி வருவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, மாணவிகள் யாரும் முக கவசம் அணியாமல் சமூக இடைவெளி விடாமல் அமர்ந்திருந்தனர். இதையடுத்து மாணவிகள் அனைவரையும் அவரவர் வீடுகளுக்கு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தினர். பின்னர், நீட் பயிற்சி மையத்துக்கு 5 ஆயிரம் அபராதம் விதித்து ‘‘சீல்’’ வைத்தனர்.

No comments:

Post a Comment