வாகன ஆய்வாளர் பதவி: தேர்வு முடிவு அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, April 28, 2021

வாகன ஆய்வாளர் பதவி: தேர்வு முடிவு அறிவிப்பு

 வாகன ஆய்வாளர் பதவி: தேர்வு முடிவு அறிவிப்பு


மோட்டார் வாகன ஆய்வாளர் பதவி தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 


டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:


தமிழக போக்குவரத்து சார்நிலை பணிகளில் அடங்கிய, மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை -- 2 பதவியில், 110 காலியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்ப, 2018, ஜூனில் போட்டி தேர்வு நடந்தது.


இந்த தேர்வில், 1,328 பேர் பங்கேற்றனர். அவர்களில், 226 பேர் நேர்காணல் தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கு ஜூன், 8 முதல், 11 வரை நேர்காணல் தேர்வு நடக்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment