சென்னை பல்கலையில் சேர நாளை வரை அவகாசம் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, April 28, 2021

சென்னை பல்கலையில் சேர நாளை வரை அவகாசம்

 சென்னை பல்கலையில் சேர நாளை வரை அவகாசம்


சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில் சேர, நாளை வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து, சென்னை பல்கலை பொறுப்பு பதிவாளர் மதிவாணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், 2021ம் ஆண்டில், யு.ஜி.சி., அனுமதித்த இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள், சான்றிதழ் படிப்புகள், டிப்ளமா போன்றவற்றுக்கு, மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.


இந்த படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பம் அளிக்க, நாளை வரை அவகாசம் நீட்டிக்கப் பட்டு உள்ளது. இதை மாணவர்கள் பயன்படுத்தி, விரைந்து விண்ணப்பிக்கலாம். பல்கலையின் மாணவர் சேர்க்கை மையம் மட்டுமின்றி, ஆன்லைனில்,


 www.ideunom.ac.in 


என்ற இணையதளம் வழியாகவும் சேரலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment