பேராசிரியர்களை கல்லுாரிக்கு வர கட்டாயப்படுத்த கூடாது! - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, April 28, 2021

பேராசிரியர்களை கல்லுாரிக்கு வர கட்டாயப்படுத்த கூடாது!

 பேராசிரியர்களை கல்லுாரிக்கு வர கட்டாயப்படுத்த கூடாது!


பேராசிரியர்களை கல்லூரிக்கு வர கட்டாயப்படுத்தக் கூடாது' என, கல்லூரி முதல்வர்கள், செயலர்களுக்கு, கல்லூரி கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுதொடர்பாக, கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் கலைச் செல்வி, கல்லூரி முதல்வர்கள் மற்றும் செயலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:தமிழக அரசின் உத்தரவுப்படி, ஆன்லைன் வழியில் மட்டுமே மாணவர்களுக்கு பாடங்கள் நடத்த வேண்டும். ஆனால், சில கல்லூரிகளில் பேராசிரியர்கள் நேரடியாக கல்லூரிக்கு வந்து, அங்கிருந்து, ஆன்லைன் பாடங்களை நடத்த வேண்டும் என, கூறியுள்ளன.


அதேபோல, 'நாக்' என்ற தேசியதர அமைப்பு பணிகளை கவனிக்கவும், பேராசிரியர்கள் கட்டாயம் கல்லூரிக்கு வர வேண்டும் நிர்பந்திப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. தற்போதைய சூழலில் கல்லூரி ஆசிரியர்களை கல்லூரிக்கு எக்காரணம் கொண்டும் நேரில் வர, நிர்ப்பந்தம் செய்ய வேண்டாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment