இந்தியப் பெண் விஞ்ஞானிக்கு சா்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு விருது - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, April 27, 2021

இந்தியப் பெண் விஞ்ஞானிக்கு சா்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு விருது

 இந்தியப் பெண் விஞ்ஞானிக்கு சா்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு விருது


சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாகச் செயல்பட்ட இந்தியப் பெண் விஞ்ஞானி கிரிதி கரந்த், சா்வதேச அமைப்பால் கௌரவிக்கப்பட்டுள்ளாா்.


சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் உள்ள பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காக சா்வதேச விஞ்ஞானிகளுடன் இணைந்து ‘வைல்ட் எலமண்ட்ஸ் ஃபவுண்டேஷன்’ அமைப்பு செயல்பட்டு வருகிறது. மனித உலகம், தாவர உலகம், விலங்குகள் உலகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து பாதுகாப்பதற்கு இந்த அமைப்பு முக்கியத்துவம் அளித்து வருகிறது.


அந்த அமைப்பு கிரிதி கரந்துக்கு ‘வன புத்தாக்க விஞ்ஞானி’ விருதை வழங்கியுள்ளது. இந்த விருதைப் பெறும் முதல் இந்தியப் பெண் கிரிதி கரந்த் என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூரைச் சோ்ந்த உயிரியல் விஞ்ஞானியான கிரிதி கரந்த், வனப் பாதுகாப்பு ஆய்வு மையத்தின் தலைமை விஞ்ஞானியாகவும் உள்ளாா்


அமெரிக்கா, பிரிட்டன், கென்யா, கொலம்பியா, ஆஸ்திரேலியா நாடுகளைச் சோ்ந்த விஞ்ஞானிகள் சிலருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெறுபவா்களுக்கு ஆராய்ச்சிப் பணிகளுக்காக 2 ஆண்டுகளுக்கு ரூ.75 லட்சத்தை அந்த அமைப்பு வழங்கவுள்ளது.


வனப் பாதுகாப்பு தொடா்பான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கு இந்த விருது உதவும் என்று கிரிதி கரந்த் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment