கொரோனாவுக்கு மருந்து : ஆசிரியருக்கு அபராதம் - Minnal Kalvi Seithi

Breaking

Friday, April 30, 2021

கொரோனாவுக்கு மருந்து : ஆசிரியருக்கு அபராதம்

 கொரோனாவுக்கு மருந்து : ஆசிரியருக்கு அபராதம்


கொரோனாவுக்கு மருந்து பரிந்துரைக்க அனுமதி கோரிய பள்ளி ஆசிரியருக்கு, 1,000 ரூபாய் அபராதம் விதித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கும் விடுமுறை


https://www.minnalkalviseithi.com/2021/04/blog-post_351.html?m=1


 பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற பிளஸ் 2 மாணவா்களுக்கு அலகுத் தோ்வு*


https://www.minnalkalviseithi.com/2021/04/2_30.html?m=1


 நாளை ஓட்டு எண்ணிக்கை நடைபெறப் போவது இப்படி தான்!*


https://www.minnalkalviseithi.com/2021/04/blog-post_79.html?m=1


EMPLOYMENT NEWS PAPER MAY 1 -- 7 PDF


https://www.minnalkalviseithi.com/2021/04/employment-news-paper-may-1-7-pdf.html?m=1


மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவைச் சேர்ந்தவர் சுரேஷ் ஷா. கொரோனாவுக்கான மருந்தை ஆராய்ச்சி வாயிலாக கண்டுபிடித்துள்ளதாகவும், அதை நோயாளிகளுக்கு பரிந்துரைக்க அனுமதிக்கும்படியும், கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.தனிப்பட்ட ஆர்வம்இவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆத்திரம் அடைந்த சுரேஷ் ஷா, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.


இந்த வழக்கு, தலைமை நீதிபதி, என்.வி.ரமணா முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, ''நீங்கள் மருத்துவரா அல்ல விஞ்ஞானியா...? என்ன படித்திருக்கிறீர்கள்,'' என, நீதிபதி ரமணா கேட்டார்.''நான் டாக்டர் அல்ல; வணிகவியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். தனிப்பட்ட ஆர்வத்தில், மருத்துவ ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்,'' என, சுரேஷ் ஷா கூறினார். 


இதனால் எரிச்சல் அடைந்த தலைமை நீதிபதி, ''டாக்டர்களுக்கு தெரியாத மருந்தை, இந்த உலகத்துக்கே பரிந்துரைக்க நீங்கள் விரும்புகிறீர்கள். வணிகவியல் படித்த ஒருவர், கொரோனா குறித்து, டாக்டர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் கற்றுக் கொடுக்க விரும்புகிறீர்கள்.10 லட்சம் ரூபாய்''இந்த லட்சணத்தில், கோல்கட்டா உயர் நீதிமன்ற உத்தரவில் திருப்தி இல்லாமல், இங்கு வந்துள்ளீர்கள். உங்களுக்கு, 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க முடியும்,'' என்றார்.


இதனால் பதற்றம்அடைந்த சுரேஷ், ''நான் ஒரு வேலையில்லா பள்ளி ஆசிரியர். என்னால், 10 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த முடியாது; 1,000 ரூபாய் செலுத்துகிறேன்,'' என்றார். இதையடுத்து, 1,000 ரூபாய் அபராதத்தை, கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் செலுத்தும்படி, நீதிபதி ரமணா உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment