'உயர்கல்வி அளிப்பது அரசின் தாராள நன்கொடையாக பார்க்க முடியாது: அது அரசின் கடமை: உச்சநீதிமன்றம் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, April 14, 2021

'உயர்கல்வி அளிப்பது அரசின் தாராள நன்கொடையாக பார்க்க முடியாது: அது அரசின் கடமை: உச்சநீதிமன்றம்

 'உயர்கல்வி அளிப்பது அரசின் தாராள நன்கொடையாக பார்க்க முடியாது: அது அரசின் கடமை: உச்சநீதிமன்றம்


உயர்கல்வி அளிப்பது என்பது அரசின் தாராள நன்கொடையாக பார்க்க முடியாது. அது அரசின் கடமை, பொறுப்பாகும்' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.


மத்திய அரசின் தொகுப்பில், லடாக்கைச் சேர்ந்த, இரண்டு மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேருவதற்கு, லடாக் நிர்வாகம் பரிந்துரை செய்திருந்தது.


 ஆனால், 'தங்களுக்கு இடம் ஒதுக்கப்படவில்லை' என, அந்த மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.இந்த வழக்கில், நீதிபதிகள், டி.ஒய். சந்திரசூட், எம்.ஆர். ஷா அமர்வு அளித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது


:மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது, அரசியல் சாசனத்தின் கீழ் அடிப்படை உரிமையாக குறிப்பிடப்படவில்லை. 


அதே நேரத்தில், உயர்க்கல்வி வாய்ப்பு வழங்குவது என்பது, மத்திய அரசின் தாராள நன்கொடையாக எடுத்துக் கொள்ள முடியாது. அனைத்து நிலையிலும், மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பு வழங்கப்படுவதை, அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.


அதற்கு, அவர்களுடைய ஜாதி, மதம், இனம், பாலினம், பொருளாதாரம், வசிக்கும் இடம் உள்ளிட்டவை தடையாக இருக்கக் கூடாது. இந்த மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேருவதற்கு லடாக் நிர்வாகம் ஏற்கனவே பரிந்துரைத்துள்ளது. அதன்படி , 'சீட்' வழங்கப்படும் என, இங்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் இடம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

No comments:

Post a Comment