CBSE பிளஸ் 2 தேர்வு ஒத்திவைப்பு; மாணவர்கள், ஆசிரியர்கள் கூறுவதென்ன? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, April 14, 2021

CBSE பிளஸ் 2 தேர்வு ஒத்திவைப்பு; மாணவர்கள், ஆசிரியர்கள் கூறுவதென்ன?

 CBSE பிளஸ் 2 தேர்வு ஒத்திவைப்பு; மாணவர்கள், ஆசிரியர்கள் கூறுவதென்ன?


சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் பயிலும், பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள், கல்வியாளர்கள் மத்தியில், பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.


சி.பி.எஸ்.இ., எனும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும், பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, மே மாதம் 4ல் பொதுத்தேர்வு துவங்க திட்டமிடப்பட்டது


.இந்நிலையில், மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்ததால், பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ., தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த அறிவிப்பால், மாணவர்கள் மத்தியில் தேர்வு தயாரிப்புக்கு ஆர்வம் காட்டுவது குறைந்துவிடும் என, பெற்றோர் சிலரும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தேர்வை நடத்தலாம் என்று வேறு சிலரும் கூறுகின்றனர். 


‌ 'கூடுதல் நேரம் கிடைக்கும்' ‌


எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மணிமேகலை கூறுகையில்,'' பொதுத்தேர்வு மட்டுமல்லாமல், நீட் தேர்வும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் முழுமையாக தங்களை தயார்ப்படுத்தி கொள்ள, போதிய அவகாசம் உள்ளது.


 கூடுதல் அவகாசம் இருப்பதால், மாணவர்கள் தயாரிப்பு பணிகளில், ஈடுபடுவதற்கான வாய்ப்பாக இதை கருதுகிறேன்,'' என்றார்.


‌ 'தேர்வு தயாரிப்பில் சுணக்கம் வரும்' ‌


தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க மாநில பொதுசெயலார் நந்தகுமார் கூறுகையில், ''சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு, விரைவில் தேர்வு அட்டவணை வெளியிட்டால் தான், மாணவர்கள் மத்தியில் ஏற்படும் சோர்வு மனப்பான்மை நீங்கும். தேர்வு தள்ளி வைப்பதால், தயாரிப்பு பணிகளில் சுணக்கம் ஏற்படவும் வாய்ப்புள்ளது,'' என்றார்.


‌ 'கூடுதல் அவகாசம் கிடைத்துள்ளது' ‌


'' பொதுத்தேர்வு ஒத்தி வைத்ததன் மூலம், போதிய அவகாசம் கிடைத்துள்ளது. இருப்பினும், விரைவில் தேர்வு அட்டவணை வெளியிட வேண்டும்,'' ~ கோகுல், மாணவர், கேந்திரிய வித்யாலயா பள்ளி, புலியகுளம்.


''தேர்வு ஒத்தி வைப்பால் சோர்வு ஏற்படும். இருப்பினும் விரைவில் தேர்வுக்கான தயாரிப்பு பணிகளில் கவனம் செலுத்திவிடுவோம்,''~ ஜனபிரபாகர், மாணவர், கேந்திரிய வித்யாலயா பள்ளி, புலியகுளம்.

No comments:

Post a Comment