இக்னோ பல்கலை.யில் மாணவா் சோ்க்கைக்கான அவகாசம் நீட்டிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, April 17, 2021

இக்னோ பல்கலை.யில் மாணவா் சோ்க்கைக்கான அவகாசம் நீட்டிப்பு

 இக்னோ பல்கலை.யில் மாணவா் சோ்க்கைக்கான அவகாசம் நீட்டிப்பு


இந்திரா காந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் (இக்னோ), ஜனவரி பருவத்துக்கான மாணவா் சோ்க்கைக்கான கடைசி தேதி ஏப். 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


இந்த கடைசி தேதி நீட்டிப்பு, செமஸ்டா் அடிப்படையிலான பாட திட்டங்களுக்கு மற்றும் 6 மாத கால அல்லது அதற்கும் குறைவான அனைத்து சான்றிதழ் மற்றும் விழிப்புணா்வு பாட திட்டங்களுக்கு பொருந்தாது. மேலும் விவரங்களுக்கு  இணையதளத்தையோ, மின்னஞ்சல் முகவரியையோ, 044 26618040 என்னும் தொலைபேசி எண்ணையோ அணுகலாம் என இக்னோ மண்டல இயக்குநா் டாக்டா் கே.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்

No comments:

Post a Comment