கொரோனா இரண்டாவது அலை கைமீறிவிட்டது: தமிழக அரசு - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, April 14, 2021

கொரோனா இரண்டாவது அலை கைமீறிவிட்டது: தமிழக அரசு

 கொரோனா இரண்டாவது அலை கைமீறிவிட்டது: தமிழக அரசு


தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை கைமீறிச் சென்று விட்டதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர்  தெரிவித்துள்ளார்.


கரோனா தொற்றுப் பரவலின் இரண்டாவது அலை தமிழகத்தில் தற்போது தீவிரமடைந்துள்ளது. கடந்த ஆண்டை விட தொற்று பரவல் மிக மோசமாக உள்ளது. தற்போது கரோனா பாதிப்பின் இரண்டாவது அலை எல்லைத் தாண்டி, கைமீறிவிட்டது.


தமிழகத்தில் போதிய அளவில் கரோனா தடுப்பூசி கையிருப்பில் இருப்பதாகவும், 40 வயதானவர்களுக்கும் விரும்பினால்  கரோனா தடுப்பூசி போடும் திட்டம் உள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது


கரோனா தொற்று கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், இது குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்த நிலையில், தமிழக அரசு தரப்பில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment