கணினி பயிற்றுநர் தேர்வு முறைகேடு விசாரணை குழுவிடம் முறையிடுக: உயர்நீதிமன்றம் உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, April 14, 2021

கணினி பயிற்றுநர் தேர்வு முறைகேடு விசாரணை குழுவிடம் முறையிடுக: உயர்நீதிமன்றம் உத்தரவு

 கணினி பயிற்றுநர் தேர்வு முறைகேடு விசாரணை குழுவிடம் முறையிடுக: உயர்நீதிமன்றம் உத்தரவு


கணினி பயிற்றுநர் தேர்வு முறைகேடு குறித்து இரு நபர் விசாரணைக்குழுவிடம் மனு செய்து நிவாரணம் தேடலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.


கணினி பயிற்றுநர்கள் (முதுநிலை ஆசிரியர் நிலை) நியமனத்திற்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் 2019ல் அறிவித்தது. செல்வம் என்பவர், 'தேர்வு நடைமுறைகளில் சில தவறுகள் நடந்தன. தேர்வு அறிவிப்பை ரத்து செய்து, புதிதாக தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்' என உயர்நீதிமன்ற கிளையில் மனு செய்தார். சில கேள்விகளுக்கு தவறான 'கீ' பதில்கள் இடம் பெற்றதால் அதற்குரிய மதிப்பெண் வழங்கி தற்காலிக தேர்வானோர் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற உத்தரவிடக்கோரி சில மனுக்கள் தாக்கலாகின.


நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் உத்தரவு: இதுபோல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கலாகின. அந்நீதிமன்ற உத்தரவுப்படி இரண்டு உறுப்பினர்கள் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு சென்னை நுங்கம்பாக்கம் கல்லுாரி சாலை டி.பி.ஐ., வளாகம் ஈ.வி.கே.சம்பத் மாளிகையில் விசாரிப்பதாக அரசு தரப்பு தெரிவிக்கிறது.


முறைகேடுகள்/தவறுகள், வினாத்தாள் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டதன் செல்லுபடி தன்மை, 'கீ' பதில்களில் தவறுகள் மற்றும் தேர்வு நடைமுறைகள் குறித்த குறைபாடுகள் குறித்து அக்குழுவை மனுதாரர்கள் அணுகி மனு செய்து நிவாரணம் தேடலாம் என்றார்.

No comments:

Post a Comment