108 ஆம்புலன்சிற்காக நோயாளிகள் காத்திருக்க வேண்டியதில்லை காரிலேயே கொரோனா சிகிச்சை அளிக்க ஏற்பாடு: இந்தியாவிலேயே சென்னையில் புதிய நடைமுறை - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, May 12, 2021

108 ஆம்புலன்சிற்காக நோயாளிகள் காத்திருக்க வேண்டியதில்லை காரிலேயே கொரோனா சிகிச்சை அளிக்க ஏற்பாடு: இந்தியாவிலேயே சென்னையில் புதிய நடைமுறை

 108 ஆம்புலன்சிற்காக நோயாளிகள் காத்திருக்க வேண்டியதில்லை காரிலேயே கொரோனா சிகிச்சை அளிக்க ஏற்பாடு: இந்தியாவிலேயே சென்னையில் புதிய நடைமுறை


சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, சிறப்பு அதிகாரி சித்திக் ஆகியோர் கூட்ட நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பலருக்கு ஆக்சிஜன் தேவைப்படாது.


 எனவே, ஆக்சிஜன் தேவையில்லாத நோயாளிகளுக்கு 108 ஆம்புலன்ஸை தவிர்த்து காரிலேயே சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. டிரைவர்,  நோயாளிகளுக்கு இடையே  பிளாஸ்டிக் சீட் தகுந்த பாதுகாப்புடன் காரிலேயே, சிகிச்சை அளிக்க வசதி செய்யப்படுகிறது. மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு மண்டலத்திலும் குறைந்தது 15 கார்கள் கொடுக்க கூடிய சிஸ்டம் கொண்டு வந்துள்ளோம்


அதன்பிறகு கூடுதலாக தேவையென்றால் கார்கள் கொடுக்கப்படுகிறது. 


 ரிசல்ட் பாசிட்டிவ் யாருக்கு என்று பார்த்து அவர்களை கோவிட் கேர் சென்டர்களை அழைத்து வர இந்த வாகனம் பயன்படுத்தப்படும். யார், யாருக்கெல்லாம் ஸ்கிரீனிங்  சென்டர் போக வேண்டுமோ அவர்கள் இந்த கார் மூலம் அழைத்து செல்லப்படுவார்கள்.  மண்டல ஹெல்ப் லைன் எண்ணுக்கு அழைத்தாலே இந்த கார் வந்து விடும். 


தற்போது மாநகராட்சி சார்பில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மெடிக்கல் கிட்  தரப்படவுள்ளது. சென்னை மாநகராட்சியில் 30 ஆயிரம் மெடிக்கல் கிட் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.


 ஒரு நோயாளி பரிசோதனை கட்டத்தில் வரும் போது, அவருக்கு அறிகுறி இருக்கும் போது, அதாவது காய்ச்சல், தொண்டை  வலி, உடல் வலி என எதாவது பிரச்சனை இருந்தால் அவர்களுக்கான மருத்துவ கிட் உடனே கொடுக்கப்படும். அவர்களுக்கு பரிசோதனை முடிவு வருவதற்குள்ளாக இந்த கிட் அவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.  அவர்கள் கிட்டில் உள்ள  மருந்தை சாப்பிட ஆரம்பித்து விட்டால் அவர்களுக்கு பாதிப்பு அதிகமாகாது. 


எந்த அறிகுறி வந்தாலும் ஹெல்ப்லைன் தொடர்பு கொள்ள வேண்டும்.  இந்த காரிலேயே சிகிச்சை அளிக்கும் திட்டத்தில் ஒரு சில மண்டலங்களில் அதிக பாதிப்பு  இருந்து வாகனங்கள் வரவில்லை என்றால், 108 உடன் இணைந்து செயலாற்றுவோம். இது தொடர்பாக 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். 

No comments:

Post a Comment