14  தேர்வுகளின் முடிவுகள் ஜூன் 8ல் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, May 12, 2021

14  தேர்வுகளின் முடிவுகள் ஜூன் 8ல் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

 14  தேர்வுகளின் முடிவுகள் ஜூன் 8ல் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய கட்டுபாட்டு அலுவலர் சுதன் வெளியிட்டுள்ள அறிக்கை:


 2020ம் ஆண்டு டிசம்பரில் நடத்தப்பட்ட துறை தேர்வுகளில் 129 தேர்வுகளின் முடிவகளும், எந்தெந்த தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன என பட்டியலும் கடந்த மே 8ம் தேதி தேர்வாணையத்தால் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.


 அப்பட்டியலில் 14 தேர்வுகளை தவிர மற்ற அனைத்து துறைத் தேர்வுகளும் இடம் பெற்றுள்ளன. முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 14 தேர்வுகளின் முடிவுகள் ஜூன் 8ம் தேதி வெளியிடப்படும். மே 2021 துறை தேர்வுகளுக்கு இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 15ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment