எந்தவிதமான அறிகுறியும் இல்லாத லேசான தொற்றை குணப்படுத்தும் 'கபசுரக் குடிநீர்' - ஆராய்ச்சியில் உறுதியானதால் ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரை - மின்னல் கல்விசெய்தி

Latest

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

இங்கே தேடவும்!

Wednesday, May 12, 2021

எந்தவிதமான அறிகுறியும் இல்லாத லேசான தொற்றை குணப்படுத்தும் 'கபசுரக் குடிநீர்' - ஆராய்ச்சியில் உறுதியானதால் ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரை

 எந்தவிதமான அறிகுறியும் இல்லாத லேசான தொற்றை குணப்படுத்தும் 'கபசுரக் குடிநீர்' - ஆராய்ச்சியில் உறுதியானதால் ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரை


அறிகுறி இல்லாத, லேசான, மிதமானகரோனா தொற்றை கபசுரக் குடிநீர் குணப்படுத்துவது ஆராய்ச்சியில் உறுதியானதால், அதைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.


கரோனா தொற்றுக்கு தொடக்கத்தில் ஆங்கில மருத்துவம் மூலம்சிகிச்சை அளிக்கப்பட்டது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதால், லேசான, மிதமான தொற்று இருப்பவர்களுக்கு சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை அளிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் சித்த மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டு, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கபசுரக் குடிநீர் உள்ளிட்ட சித்தமருந்துகளால் ஆயிரக்கணக்கானோர் தொற்றில் இருந்து மீண்டனர்.


இந்நிலையில், கரோனா 2-வது அலை தீவிரமடைந்து வருவதால், சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமாறு சித்த மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.


இதையடுத்து, சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கலை, அறிவியல் கல்லூரியில் 240 படுக்கைகள், மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் 70 படுக்கைகளுடன் சித்த மருத்துவ சிகிச்சை மையங்களை தமிழக அரசு அமைத்தது.


இதேபோல, மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் தாம்பரத்தில் செயல்படும் தேசிய சித்த நிறுவனமருத்துவமனையில் 100 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், தருமபுரி, தேனி,நாமக்கல், கரூர், திருவண்ணாமலை, அரியலூர், மதுரை, தென்காசி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களில் தமிழக அரசு சித்த மருத்துவ மையங்களை அமைக்க உள்ளது.


இந்நிலையில், அறிகுறி இல்லாத,லேசான மற்றும் மிதமான தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கபசுரக் குடிநீர்மூலம் குணமடைவது, மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம்நடத்திய ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதேபோல, ஆயுஷ்-64என்ற ஆயுர்வேத மருந்து தொற்றைக்குணப்படுத்துவதும், மத்திய ஆயுர்வேத மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் ஆராய்ச்சியில் தெரியவந்துள் ளது. இந்த 2 மருந்துகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தேவையானவர்களுக்கு கொடுக்கவும் மாநில அரசுகளுக்கு, மத்தியஆயுஷ் அமைச்சகம் உத்தரவிட்டுள் ளது.


இதுகுறித்து மாநில மருந்து உரிமம் வழங்கும் அலுவலரும், சித்தமருத்துவருமான எம்.பிச்சையாகுமாரிடம் கேட்டபோது, 'கபசுரக் குடிநீர் லேசான, மிதமான தொற்றை குணப்படுத்துவது, ஆராய்ச்சியின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இனியாரும் கபசுரக் குடிநீர் குறித்த தவறான குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது.


கரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால், அனைத்து மாவட்டங்களிலும் சித்த மருத்துவ சிகிச்சை மையங்களை உடனடியாக தொடங்க வேண்டும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டுக் கண்காணிப்பில் இருப்பவர்கள், சித்த மருத்துவரின் ஆலோசனைபடி கபசுரக் குடிநீரைக் குடிக்கலாம்' என்றார்.

No comments:

Post a Comment