12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, May 11, 2021

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை

 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை


12-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.


சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உயர்கல்வித் துறை செயலாளர் அபூர்வா, பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.


தமிழகத்தில் 2-ம் அலை கரோனா பரவல் காரணமாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.


கரோனா கட்டுப்பாடுகளுடன் பொதுத்தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்து வருகிறது.


இதனிடையே முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசித்து விரைவில் பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்திருந்தார்.


இந்நிலையில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

No comments:

Post a Comment