சேலத்தைச் சேர்ந்த கணிதப் பட்டதாரி 24 மணி நேரம் ஓவியம் வரைந்து உலக சாதனைக்கு முயற்சி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, May 11, 2021

சேலத்தைச் சேர்ந்த கணிதப் பட்டதாரி 24 மணி நேரம் ஓவியம் வரைந்து உலக சாதனைக்கு முயற்சி

 சேலத்தைச் சேர்ந்த கணிதப் பட்டதாரி 24 மணி நேரம் ஓவியம் வரைந்து உலக சாதனைக்கு முயற்சி


உலக சாதனை படைக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த கணிதப் பட்டதாரியான சங்கீதா, தொடர்ந்து 24 மணி நேரம் ஓவியம் வரையத் தொடங்கியுள்ளார்.


சேலம் மாவட்டம் ஆத்தூர் வீரராகவர் தெருவைச் சேர்ந்த வேலாயுதம் மகள் சங்கீதா(21). இவர் இளங்கலை கணிதம் படித்துள்ளார். இவருக்கு ஓவியத்தில் ஆர்வம் உண்டு


இந்நிலையில் வெர்ட்யூ புத்தக உலக சாதனைக்காக டூடுள் ஓவியம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமுடக்கத்தில் கரோனோ குறித்த விழிப்புணர்வு ஓவியத்தை தொடர்ந்து 24 மணி நேரம் வரைய முடிவெடுத்து செவ்வாய்க்கிழமை காலை 7.30மணிக்கு தொடங்கியுள்ளார். இவர் தொடர்ந்து புதன்கிழமை காலை வரை ஓவியம் வரைந்துக் கொண்டிருப்பார்.


இவருக்கு பெற்றோர் மற்றும் நண்பர்கள் உறுதுணையாக உள்ளனர்.

No comments:

Post a Comment