கேரளாவில் ஜூன் 1ம் தேதி ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம் - Minnal Kalvi Seithi

Breaking

Friday, May 28, 2021

கேரளாவில் ஜூன் 1ம் தேதி ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்

 கேரளாவில் ஜூன் 1ம் தேதி ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்


கேரளாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. தற்போதும் பரவல் தீவிரமாக இருப்பதால் இந்த வருடமும் ஆன்லைனிலேயே வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.


 இது குறித்து கேரள பள்ளி கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி கூறுகையில், ‘‘இந்த வருடமும் ஆன்லைன் மூலம் தான் வகுப்புகள் நடத்தப்படும். 1 முதல் 10 வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் ஜூன் 1ம் தேதி முதல் தொடங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிளஸ்2 வகுப்புகள் தொடங்குவது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment