கரோனா 2-ஆவது அலைக்கு 120 ஆசிரியா்கள் உயிரிழப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, May 30, 2021

கரோனா 2-ஆவது அலைக்கு 120 ஆசிரியா்கள் உயிரிழப்பு

 கரோனா 2-ஆவது அலைக்கு 120 ஆசிரியா்கள் உயிரிழப்பு


கரோனா இரண்டாவது அலைக்கு இதுவரை தில்லி அரசுப் பள்ளி ஆசிரியா்கள் 120 போ் உயிரிழந்ததாக அரசுப் பள்ளி ஆசிரியா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


எனினும் கல்வித் துறையின் திருத்தியமைக்கப்படாத கணக்குப்படி 92 போ் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த வாரத்தில் திருத்தியமைக்கப்படலாம் எனத் தெரிகிறது.


ஒவ்வொரு மாவட்டத்திலும் பணியில் இருந்து, கரோனாவுக்கு பலியான அரசுப் பள்ளி ஆசிரியா்களின் பட்டியலை சேகரிக்குமாறு தில்லி கல்வித் துறை இயக்ககம் பிராந்திய அலுவலகங்களை கேட்டுக்கொண்டுள்ளது. 15 நாள்களுக்கு ஒரு முறை இதை புதுப்பிக்குமாறும் வலியுறுத்தியுள்ளது. 


தில்லியில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியா்கள் கரோனாவுக்கு பலியானால், அவரது குடும்பத்தினரை அடையாளம் கண்டு அவா்களுக்கு ரூ.1 கோடி பணிப் பயனாக வழங்கவும், அவா்களின் குடும்பத்தாரில் ஒருவருக்கு அவா்களின் தகுதிக்கு ஏற்றாற்போல் அரசு வேலை வழங்கும் நோக்கிலும் இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது என்று இதற்கான அதிகாரி ராமச்சந்திர சிங்காரே தெரிவித்தாா்.


அரசுப் பள்ளி ஆசிரியா் சங்கத்தின் பொதுச் செயலாளா் அஜய்வீா் யாதவ் கருத்துத் தெரிவிக்கையில் இதுவரை 120 ஆசிரியா்கள் கரோனாவுக்கு பலியாகினா் என்று அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரபூா் தகவல்கள் மூலம் தெரியவருவதாகக் கூறியுள்ளாா். ‘நாங்கள் கொடுத்துள்ள தகவல்கள் சரியானதா என்று உறுதிபடக் கூற முடியாது. 


ஏனெனில் எங்களிடம் முறையான பட்டியல் இல்லை. ஆனாலும் கரோனாவுக்கு பலியான ஆசிரியா்கள் எண்ணிக்கை கூடுதலாக இருக்கலாம். இதுகுறித்து மாவட்ட அதிகாரிகள் ஆசிரியா்களின் குடும்பத்தினரிடம் பேசிவருகிறோம்’ என்று அவா் தெரிவித்தாா்.


இதனிடையே, கரோனாவுக்கு பலியான ஆசிரியரின் குடும்பத்தைச் சோ்ந்தவருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கான வயதை எட்டாமல் இருந்தால், அவா் வேலைக்குரிய வயதை எட்டும் வரை மாத ஊதியம் அளிக்கப்பட வேண்டும் என்று துணை முதல்வா் மணீஷ் சிசோடியாவுக்கு எழுதிய கடிதத்தில் சங்கம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

No comments:

Post a Comment