புதிய வருமானவரி வலைதளம் ஜூன் 7-இல் செயல்படும் - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, May 30, 2021

புதிய வருமானவரி வலைதளம் ஜூன் 7-இல் செயல்படும்

 புதிய வருமானவரி வலைதளம் ஜூன் 7-இல் செயல்படும்


வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வதற்கான புதிய வலைதளம் ஜூன் 7 முதல் செயல்படும் எனவும், இந்த வலைதளம் செல்லிடப்பேசிகளிலும் சிறப்பாக செயல்படும் என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.


இதுதொடா்பாக அந்தத் துறை சுட்டுரையில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘வருமான வரிக் கணக்கை இணையவழியில் தாக்கல் செய்வதற்கு தற்போதுள்ள வலைதளத்துக்கு பதிலாக  புதிய வலைதளம் ஜூன் 7-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த வலைதளத்தில் தகவல் பரிமாற்றம் செய்வதற்கு, வரி செலுத்துவதற்கென பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன.


 செல்லிடப்பேசிகளிலும் சிறப்பாக செயல்படக் கூடிய இந்த வலைதளம் பயன்படுத்துவதற்கு எளிமையாகவும் முன்கூட்டியே நிரப்பப்பட்ட வருமானவரிக் கணக்கு படிவத்தையும் கொண்டிருக்கும்


இதுமட்டுமன்றி வரி சாா்ந்த தேவைகளுக்கு பயனா் கையேடுகள், காணொலிகளுடன் படிப்படியான வழிகாட்டுதல்களைக் கொண்ட செல்லிடப்பேசி செயலியும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.


புதிய வலைதள உருவாக்கத்தையொட்டி, வருமான வரித் துறையின் இணையவழி கணக்குத் தாக்கல் சேவைகள் ஜூன்1 முதல் 6 தேதி வரை செயல்படாது.

No comments:

Post a Comment