பிளஸ்2 தேர்வு குறித்து பள்ளி கல்வி அமைச்சர் ஆலோசனை - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, May 11, 2021

பிளஸ்2 தேர்வு குறித்து பள்ளி கல்வி அமைச்சர் ஆலோசனை

 பிளஸ்2 தேர்வு குறித்து பள்ளி கல்வி அமைச்சர் ஆலோசனை


பள்ளிக் கல்வித்துறையின் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கடந்த இரண்டு நாட்களாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதையடுத்து, இரண்டாவது நாளாக  நேற்றும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் 32 மாவட்ட முதன்மைக் கல்வி  அலுவலர்கள் பங்கேற்றனர். அவர்களுடன் பள்ளிக் கல்வி இயக்குநர், தேர்வுத்துறை இயக்குநர் பங்கேற்றனர். 


இந்த கூட்டத்தில் பிளஸ் 2 தேர்வை எப்படி  பாதுகாப்பாக நடத்துவது என்றும் ஆலோசிக்கப்பட்டது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள சூழ்நிலை குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் விவரம் கேட்கப்பட்டது. அதிகாரிகள் தெரிவிக்கும் விவரங்கள் அனைத்தும் முதல்வரிடம்  தெரிவிக்கப்பட்ட பிறகு பிளஸ் 2 தேர்வு நடத்துவது குறித்து முதல்வர் அறிவிப்பார்

No comments:

Post a Comment