என் நூல்களை யாரும் வினியோகிக்க வேண்டாம் :அரசு அலுவலர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு வேண்டுகோள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, May 11, 2021

என் நூல்களை யாரும் வினியோகிக்க வேண்டாம் :அரசு அலுவலர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு வேண்டுகோள்

 என் நூல்களை யாரும் வினியோகிக்க வேண்டாம் :அரசு அலுவலர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு வேண்டுகோள்


அரசு விழாக்களில், அரசு அலுவலர்கள் யாரும், என் நூல்களை, அரசு செலவிலோ, சொந்த செலவிலோ, பூங்கொத்துகளுக்கு பதில் வினியோகிக்க வேண்டாம்' என, தமிழக அரசின் தலைமை செயலர் இறையன்பு, வேண்டுகோள் விடுத்து உள்ளார்.


அவரது அறிக்கை:நான் பணி நேரம் முடிந்த பின்பும், விடுமுறை நாட்களிலும், எனக்கு தெரிந்த தகவல்களை வைத்தும், என் அனுபவங்களை தொகுத்தும், சில நூல்களை எழுதி வந்தேன். அவற்றில் உள்ள பொருண்மை, கடற்கரையில் கண்டெடுத்த சிப்பியையே, முத்தாகக் கருதி சேகரிக்கும் சிறுவனின் உற்சாகத்துடன் எழுதப்பட்டவை. 


இப்போதுள்ள பொறுப்பின் காரணமாக, பள்ளி கல்வித்துறைக்கு, ஒரு மடல் எழுதி உள்ளேன். அதில், 'நான் எழுதியுள்ள நூல்களை, எக்காரணம் கொண்டும், எந்த அழுத்தம் வரப்பெற்றாலும், தலைமை செயலராகப் பணியாற்றும் வரை, எந்த திட்டத்தின் கீழும் வாங்கக் கூடாது' என, தெரிவித்துள்ளேன்.


பார்ப்பவர்களுக்கு என் பணியின் காரணமாக, அது திணிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றி, களங்கம் விளைவிக்கும் என்பதால் தான், இத்தகைய கடிதத்தை எழுதி உள்ளேன். எந்த வகையிலும், என் பெயரோ, பதவியோ தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்பதே நோக்கம்.அரசு விழாக்களில் பூங்கொத்துக்கு பதிலாக,புத்தகம் வழங்கினால் நன்று என்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது, 2006ல் பிறப்பிக்கப்பட்டது. 


அரசு விழாக்களில், அரசு அலுவலர்கள் யாரும், என்னை மகிழ்விப்பதாகஎண்ணி, என் நூல்களை, அரசு செலவிலோ, சொந்த செலவிலோ, பரிசாக பூங்கொத்துகளுக்கு பதில் வினியோகிக்க வேண்டாம் என்று, அன்புடன் விண்ணப்பம் வைக்கிறேன்


.இவ்வேண்டுகோள் மீறப்பட்டால், அரசு செலவாக இருந்தால், தொடர்புடைய அதிகாரியிடம் அது வசூலிக்கப்பட்டு, அரசு கணக்கில் செலுத்தப்படும். சொந்த செலவு செய்வதையும் தவிர்ப்பது சிறந்தது.


எனவே, இத்தகைய சூழலை, எக்காரணம் கொண்டும் ஏற்படுத்த வேண்டாம்.இவ்வாறு இறையன்பு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment