+2 பொதுத் தேர்வை ரத்து செய்யக் கோரி மனு - Minnal Kalvi Seithi

Breaking

Friday, May 28, 2021

+2 பொதுத் தேர்வை ரத்து செய்யக் கோரி மனு

 +2 பொதுத் தேர்வை ரத்து செய்யக் கோரி மனு


கரோனா பெருந்தொற்று காரணமாக 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்ய உத்தரவிடக் கோரிய மனுவை மே 31-ஆம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


இந்த மனு இன்று உச்ச நீதிமன்ற விடுமுறைக் கால அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது, மனுவை மே 31-ஆம் தேதி விசாரிப்பதாக  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


கணிக்க முடியாத கடுமையான கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பள்ளிகளில் பொதுத் தேர்வு நடத்துவது என்பது சாத்தியமற்றது. மேலும், இதைக் காரணம் காட்டி காலம் தாழ்த்துவதும் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. Sir please eppo erukura suitionla 12th public exam venam sir please .children health is important please exam venam sir😭😭😭

    ReplyDelete