12 ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேட்டி - Minnal Kalvi Seithi

Breaking

Friday, May 28, 2021

12 ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேட்டி

 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேட்டி


தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு  நிச்சயம் ஆன்லைனில் நடத்தப்படமாட்டாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


 திருச்சியில் ஆசிரியர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நிச்சயமாக நடைபெறும் என்றார். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு உரிய முடிவு எடுக்கப்படும். மாணவர்களின் படிப்பு எவ்வளவு முக்கியமோ உடல்நலமும் அவ்வளவு முக்கியம். கொரோனா தொற்று எப்போது குறைகிறதோ, அப்போது தேர்வு நடத்தப்படும். 


தொற்று பரவலை கருத்தில் கொண்டே தேர்வு நடைபெறும் என்றும் அன்பில் மகேஷ் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர், மாநில அரசே பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியை முடிவு செய்யும். தேர்வு நேரம் வழக்கம் போல் 3 மணி நேரம் நடத்த வேண்டும், பள்ளியிலேயே தேர்வு நடத்த வேண்டும் என்று பலர் வலியுறுத்தியுள்ளனர்.


 ஆதனால் மாணவர்கள் வகுப்பறைக்கு வந்தே தேர்வு எழுத வேண்டும் என்றும் ஆன்லைனில் தேர்வு நடத்தப்படமாட்டாது என்றும் உறுதியுடன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தக்கூடாது என்று தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ், விருப்பமுள்ள ஆசிரியர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்றார். 

No comments:

Post a Comment