வைரசை அழிக்கும் முக கவசம் பிளஸ் 2 மாணவி கண்டுபிடிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, May 11, 2021

வைரசை அழிக்கும் முக கவசம் பிளஸ் 2 மாணவி கண்டுபிடிப்பு

 வைரசை அழிக்கும் முக கவசம் பிளஸ் 2 மாணவி கண்டுபிடிப்பு


மேற்கு வங்கத்தை சேர்ந்த மாணவி ஒருவர், கொரோனா வைரசை அழிக்கும் முக கவசத்தை கண்டுபிடித்துள்ளார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு புர்பா பர்தமன் மாவட்டத்தில் வசிக்கும் திகந்திகா போஸ் என்ற பிளஸ் 2 மாணவி, கொரோனா வைரசை அழிக்கும் முக கவசத்தை கண்டுபிடித்து, அனைவரின் பாராட்டுகளை பெற்றுள்ளார். 


இது குறித்து திகந்திகா போஸ் கூறியதாவது:


இயற்கையிலேயே துறுதுறுவென ஏதாவது செய்து கொண்டிருப்பேன். அப்படி கண்டுபிடித்தது தான், மூன்றடுக்கு முக கவசம். முதல் அடுக்கில் துாசியை வடிகட்டும் மின்காந்த அணுக்கள் உள்ளன. அதை கடந்து இரண்டாவது அடுக்கின் வழியே காற்று, மூன்றாவது அடுக்கிற்குள் செல்லும். அப்போது அங்குள்ள சோப்பு கரைசல், கொரோனா வைரசை அழித்து, துாய்மையான காற்றை சுவாசிக்க வகை செய்கிறது. 


இயல்பாகவே சோப்பு கரைசலுக்கு கிருமிகளை அழிக்கும் சக்தி உள்ளது அனைவருக்கும் தெரியும். கொரோனா பாதித்தவரிடம் இருந்தும், வைரஸ் மற்றவர்களுக்கு பரவாமல் காக்கும் இந்த முக கவசத்திற்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.


திகந்திகா போஸ், ஏற்கனவே காதுகளை பாதிக்காத முக கவசம், தலையை திருப்பாமல், பின்னால் வருவோரை பார்க்கும் மூக்கு கண்ணாடி ஆகியவற்றை கண்டுபிடித்துள்ளார். இவற்றுக்காக மூன்று முறை, அப்துல்கலாம் விருதுகளை பெற்று உள்ளார். இவர் கண்டுபிடித்துள்ள வைரஸ் அழிப்பு முக கவசம், மும்பை கூகுள் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment