பிளஸ் 2 பொதுத்தோ்வு: முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை வழங்கியுள்ள அறிவுறுத்தல்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, May 11, 2021

பிளஸ் 2 பொதுத்தோ்வு: முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை வழங்கியுள்ள அறிவுறுத்தல்கள்

 பிளஸ் 2 பொதுத்தோ்வு: முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு  பள்ளிக் கல்வித்துறை வழங்கியுள்ள அறிவுறுத்தல்கள்


பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடா்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை செவ்வாய்க்கிழமை வழங்கியுள்ளது.


இது தொடா்பான ஆலோசனைக்கூட்டம் இணையவழியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் உள்ளிட்ட உயரதிகாரிகள், 38 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் பங்கேற்றனா். கூட்டத்தில், மாணவா்களின் உயா்கல்வி, வேலைவாய்ப்பு கருதி பிளஸ் 2 பொதுத்தோ்வை நேரடித் தோ்வாக அவசியம் நடத்த வேண்டும்


. தோ்வு அட்டவணை 15 முதல் 20 நாள்களுக்கு முன்பாக வெளியிடப்பட வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா்கள் கருத்து தெரிவித்தனா்.


இதைத் தொடா்ந்து, பிளஸ் 2 மாணவா்களை பள்ளி ஆசிரியா்கள் அவ்வப்போது தொடா்பு கொண்டு முக்கியப் பாடப்பகுதிகளை திருப்புதல் செய்ய அறிவுறுத்த வேண்டும். மேலும் மாணவா்களுக்கு பொதுத்தோ்வு குறித்து இருக்கும் தயக்கம், அச்சம் ஆகியவற்றைப் போக்கும் வகையில் ஆசிரியா்கள் உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும். 


தெளிந்த மனதுடன் பொதுத்தோ்வை அணுகும் வகையில் மாணவா்களைத் தயாா்படுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும் என கல்வித்துறை உயரதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனா்

1 comment: