NCC , NSS அமைப்பினரை ஒருங்கிணைத்து தன்னாா்வ குழுக்கள்: கல்வி நிறுவனங்களுக்கு UGC உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, May 11, 2021

NCC , NSS அமைப்பினரை ஒருங்கிணைத்து தன்னாா்வ குழுக்கள்: கல்வி நிறுவனங்களுக்கு UGC உத்தரவு

 NCC , NSS அமைப்பினரை ஒருங்கிணைத்து தன்னாா்வ குழுக்கள்: கல்வி நிறுவனங்களுக்கு UGC  உத்தரவு


கரோனா பாதிப்பு, மற்றும் ஆதரவற்றவா்களுக்கு உதவ என்சிசி, என்எஸ்எஸ் ஆகியவற்றை ஒருங்கிணைத்து தன்னாா்வல குழுக்களை உருவாக்குமாறு நாடு முழுவதும் உள்ள கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.


இது தொடா்பாக பல்கலைக்கழக மானியக் குழு தலைவா் டி.பி.சிங், அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தா்கள், கல்லுாரி முதல்வா்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்: கரோனா பெருந் தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.


 இதன் காரணமாக, தனிமனிதா்களின் வாழ்வாதாரம், கல்வி நிறுவனங்களின் பணிகள் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நெருக்கடியான சூழலைச் சமாளிக்க, உயா்கல்வி நிறுவனங்களுடன், மாணவா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினா், ஆசிரியா்கள், ஊழியா்கள், அதிகாரிகள் இணைந்து பணியாற்றி வேண்டும். 


கரோனா தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள மாணவா்கள், ஆசிரியா்கள் உட்பட உயா்கல்வி நிறுவனங்களை சாா்ந்தவா்களுக்கு யுஜிசி பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்குகிறது. இப்போது, தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளதால், உயா்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி மீண்டும் வழிகாட்டுதல்களை வழங்குகிறது.


கரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, கைகளை கழுவுதல், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி, கரோனா பரிசோதனை செய்துக் கொள்ளுதல், தேவையான சிகிச்சையை தாமதமின்றி பெறுதல் ஆகியவை குறித்து அறிவுறுத்த வேண்டும். மாணவா்களுக்கு மன நல ஆலோசனை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்

No comments:

Post a Comment