பவுடர் வடிவிலான கரோனா தடுப்பு மருந்து: '2-டிஜி' வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, May 16, 2021

பவுடர் வடிவிலான கரோனா தடுப்பு மருந்து: '2-டிஜி' வெளியீடு

 பவுடர் வடிவிலான கரோனா தடுப்பு மருந்து: '2-டிஜி' வெளியீடு


கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கும்  வகையில் ’2-டிஜி’ (டியோக்ஸி டி குளுக்கோஸ்) என்ற புதிய கரோனா தடுப்பு மருந்தை மக்கள் பயன்பாட்டிற்காக மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.


மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இன்று (மே 17) முதல்கட்ட விநியோகத்தைத் தொடக்கி வைத்தனர்.


பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் கண்டறியப்பட்டுள்ள ’2 -டிஜி’  என்ற புதிய கரோனா தடுப்பு மருந்திற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த வாரம் அனுமதி வழங்கியது.


திரவ வடிவில் அல்லாமல் பவுடர் வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மருந்தை சாதாரண தண்ணீரில் கலந்து குடிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கரோனாவால் பாதிக்கப்பட்டு மூச்சுவிட முடியாமல் ஆக்ஸிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்களுக்கும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கும் இம்மருந்தை வழங்கலாம்.


இதனைப் பயன்படுத்துவதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் தேவைப்படாது என்றும் டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment