புதிய கல்விக்கொள்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தது தமிழக அரசு - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, May 16, 2021

புதிய கல்விக்கொள்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தது தமிழக அரசு

 புதிய கல்விக்கொள்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தது தமிழக அரசு


புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான மத்திய அரசுடனான ஆலோசனையை தமிழக அரசு புறக்கணித்துள்ளது.


மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் திட்டமிட்டபடி மாநில செயலாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட நிலையில், தமிழக அரசு புறக்கணித்துள்ளது.


புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மாநில செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துவதற்கு மாறாக மாநில அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று அறிவித்திருந்தார்


இதுதொடர்பாக தமிழக அரசு எழுதிய கடிதத்திற்கு மத்திய அரசு எந்தவித பதிலும் வழங்கவில்லை. 


மேலும், புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் நுழைக்க முடியாது என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஏற்கெனவே அறிவித்திருந்தார்.


இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் மாநில செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட நிலையில், தமிழக அரசு அதனைப் புறக்கணித்துள்ளது.

No comments:

Post a Comment